சென்னை திருவொற்றியூர் பகுதியில் இன்று திடீரென குடிசை மாற்று வாரிய வீடு ஒன்று இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடு இன்று காலையே விரிசல் ஏற்பட்டதாகவும் அதனை எடுத்து இலேசாக சாய்ந்த தாகவும் கூறப்பட்டது.
இதனையடுத்து அந்த வீட்டிலுள்ளவர்கள் அவசர அவசரமாக வெளியே வந்துவிட்டனர். இந்த நிலையில் விரிசல் விழுந்த சில மணி நேரங்களில் அந்த வீடு முற்றிலும் சாய்ந்து விழுந்துவிட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் இந்த விபத்து சம்பவம் குறித்து குடிசை மாற்று வாரிய அலுவலர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சற்று முன்னர் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திருவொற்றியூரில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதை அடுத்து வீடுகளை இழந்தவர்களுக்கு உடனடியாக மாற்றும் வீடுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்
மேலும் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களுக்கு தலா ரூபாய் ஒரு லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.