வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையின் முக்கிய பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை முதல் கனமழை வரை பெய்தது. குறிப்பாக, எழும்பூர், மாம்பலம், கிண்டி, ஆலந்தூர், ராயப்பேட்டை, மதுரவாயல், அயனாவரம், பெரம்பூர், அமைந்தகரை, ஆதம்பாக்கம், தண்டையார்பேட்டை, அம்பத்தூர், தேனாம்பேட்டை, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.
கோடை காலம் தொடங்க இருக்கின்ற நிலையில், சென்னையில் மழை பெய்ததால் பல இடங்களில் வெப்பம் தணிந்து, குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், இன்று புதன்கிழமை சென்னையின் நகர்ப்புற பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் இடிமின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, சென்னை மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.