தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பா? முதல்வர் இன்று ஆலோசனை!

Webdunia
திங்கள், 13 டிசம்பர் 2021 (07:56 IST)
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டு வரும் நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 15-ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிபிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடிப்பது என்பது குறித்து ஆலோசனை செய்ய தமிழக முதல்வர் இன்று சிறப்பு கூட்டத்தை கூட்ட உள்ளார்
 
இந்த கூட்டத்தில் மருத்துவர்கள், மருத்துவத்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள், அமைச்சர்கள் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர். இன்றைய கூட்டத்தின் போது தமிழகத்தின் அண்டை மாநிலங்களில் ஒரு கொரோனா வைரஸ் பரவி வருவதை அடுத்து தமிழகத்தில் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்படும் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
மேலும் 15 நாட்கள் அல்லது ஒரு மாதம் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு நீடிக்கவும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்