இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 37ஆக உயர்வு: எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேர்?

ஞாயிறு, 12 டிசம்பர் 2021 (16:54 IST)
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 34 என்று இருந்த நிலையில் தற்போது 37 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
இந்தியாவில் உள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் மிக அதிகமாக 18 பேர்கள் ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பதும் அதனை அடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் 9 பேர்களும் டெல்லியில் 2 பேர்களும் குஜராத் மாநிலத்தில் 3 பேர்களும் ஆந்திராவில் ஒருவரும் சண்டிகரில் ஒருவரும் கர்நாடக மாநிலத்தில் மூன்று பேர்களும் ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
இந்தியாவில் படிப்படியாக பேர்களும் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்