கள்ளக்காதல் விவகாரம்: 10 வயது சிறுவன் கொடூர கொலை

Webdunia
வியாழன், 1 மார்ச் 2018 (15:41 IST)
சென்னையில் கள்ளக்காதலுக்கு இடையூராக இருந்த 10 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 10 வயதில் ரித்தேஷ் சாய் என்ற மகன் இருக்கிறான்.
 
ரித்தேஷ் சாயின் அம்மா மஞ்சுளாவுக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் நாகராஜனுக்கும் கள்ளதொடர்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு அவரது மகன் இடையூராக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் நாகராஜன் டீயூசனுக்கு சென்ற சிறுவனை, சேலையூரில் உள்ள தனது வீட்டிற்கு கடத்தி சென்று கழுத்து அறுத்து கொலை செய்துள்ளான்.
 
இந்நிலையில் சிறுவன் கொலை தொடர்பாக எம்.ஜி.ஆர் நகர் போலீசார் நாகராஜனையும், மஞ்சுளாவையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்