சித்த வைத்தியர் சிவராஜ் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் !

Webdunia
புதன், 10 பிப்ரவரி 2021 (17:47 IST)
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல சித்த வைத்தியர் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் சித்த வைத்திய மருத்துவம் மேற்கொண்டு மக்களுக்கு பல விழிப்புகளும், நோய்களுக்கான சிகிச்சைகளும் அளித்து வந்தவர்  சித்த வைத்தியர் சிவராஜ்.

இவர், சில தனியார் சேனல்களின் வாயிலாகவும் மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகள் குறித்த விழிப்புணர்வுகள் ஏற்படுத்தி வந்தார்.

இந்நிலையில் இன்று அவர் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். சித்த வைத்தியர் சிவராஜ் மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கள் தெரிவித்துள்ளார்.

அதில்’,சேலம் சிவராஜ், சித்த வைத்தியத்தில் பல சாதனைகளை செய்து, மக்களிடம் விழிப்புண்ர்வு ஏற்படுத்தியவர் அவர்  . அவர் இறந்தார் என்ற செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா சாந்தி அடையே வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்