ஐடி நிறுவனங்கள் ஆட்களை குறைக்க கூடாது – முதல்வர் வேண்டுகோள்!

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (12:25 IST)
சென்னையில் உள்ள ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுள்ளது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

சர்வதேச தகவல் மற்றும் தொலைத்தொடர்பு மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அப்போது அவர் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் முன் வந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு தமிழகத்திற்கு வெளிநாட்டு முதலீடுகள் 6 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும் கூறினார்.

தற்போது இன்போசிஸ், காக்னிசண்ட் போன்ற ஐடி நிறுவனங்கள் ஆட் குறைப்பு நடவடிக்கைகளி ஈடுபட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவுகளை குறைக்கவும், வருவாயை அதிகரிக்கவும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனம் 10 ஆயிரம் பணியாளர்களை வேலையை விட்டு நீக்க போவதாக அறிவித்தது.

இதுகுறித்து பேசிய முதல்வர் ”தகவல் தொழில்நுட்பத்தை அதிகளவு பயன்படுத்தும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஐடி துறை நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்