இந்த புல்புல் புயலால் தமிழகத்துக்கு பாதிப்பு இல்லை என்றாலும், கடல்பகுதியில் 130 முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என கூறப்படுகிறது. இந்த புயல், அடுத்த 24 மணி நேரத்தில், அதிதீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
மேலும் இந்த புயலால் மணிக்கு 70 முதல் 90 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால், கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும், மீனவர்கள் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும், இந்திய வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
புல் புல் புயல் காரணமாக, தமிழகம மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில், இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.