சென்னையில் யூடியூப் சேனல் உரிமையாளர்கள் கைது: பெண்களிடம் ஆபாசமாக பேசியதாக புகார்!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (08:32 IST)
பெண்களிடம் ஆபாசமாக பேசியும் அவன் அதனை மோசமாக எடிட் செய்தும் யூடியூபில் பதிவு செய்த 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
யூடியூப் சேனல் தொடங்குவது என்பது இப்போது பேஷனாகி விட்டது. அதில் பார்வையாளர்கள் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சர்ச்சைக்குரிய வகையிலான வீடியோக்களை பலர் வெளியிட்டு வருகின்றனர் 
 
அந்த வகையில் சென்னையைச் சேர்ந்த யூடியூப் சேனல் உரிமையாளர் ஒருவர் பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்ததாக தெரிகிறது. அது மட்டுமின்றி அதனை தவறாக எடிட் செய்து யூடியூபில் பதிவேற்றியதாகவும் புகார் எழுந்தது
 
இந்தப் புகாரை அடுத்து அந்த யூடியூப் சேனலின் உரிமையாளர், தொகுப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆகிய மூவரையும் சென்னை மாநகர காவல்துறை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. பெண்களிடம் ஆபாசமாக பேசி பேட்டி எடுத்து அதனை தவறாக எடிட் செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மற்ற யூட்யூப் சேனல்காரர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்