2040ல் சென்னையே இருக்காது..? கடலில் மூழ்கும் அபாயம்? - ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Prasanth Karthick
ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (12:21 IST)

பல்வேறு காரணங்களால் உலகளவில் கடல் மட்டம் உயர்ந்து வரும் நிலையில் 2040ல் சென்னையின் பெரும்பான்மை பகுதிகள் கடலில் மூழ்கும் அபாயம் உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

தொடர்ந்து வரும் இயற்கை மாசுபாடுகள், வனங்களை அழித்தல் உள்ளிட்ட செயல்களால் உலகம் முழுவதுமே பருவநிலை மாற்றம் என்ற பெரிய இடர்பாட்டை எதிர்கொண்டுள்ளது. பருவநிலை மாற்றம், பூமியின் வெப்பநிலை அதிகரித்தல் ஆகிய காரணங்களால் பனிப்பாளங்கள் வேகமாக உருகி வருவதுடன் கடல் மட்டமும் உயர்ந்து வருகிறது.

 

கடல் மட்டம் அதிகரிப்பதன் ஆபத்து குறித்து பெங்களூரை சேர்ந்த அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கொள்கை ஆய்வு மையம் நடத்திய ஆய்வில் வெளியாகியுள்ள முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அதன்படி, கடல் மட்டம் உயர்வதால் சென்னை, தூத்துக்குடி, கன்னியாக்குமரி, மும்பை, திருவனந்தபுரம், கொச்சி, மங்களூர், விசாகப்பட்டிணம், கோழிக்கோடு, பனாஜி உள்ளிட்ட 15 நகரங்கள் பெருமளவில் பாதிக்கப்படும் என தெரிய வந்துள்ளது.
 

ALSO READ: முதல்வர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! அல்கொய்தா காரணமா.? போலீசார் விசாரணை..!!
 

மேலும் கடல்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் 2040ம் ஆண்டில் சென்னையின் நிலப்பரப்பில் ஏறத்தாழ 7 சதவீதம் கடலில் மூழ்கிவிடும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது 2060ம் ஆண்டில் 9.65 சதவீதமாகவும், 2100ம் ஆண்டில் 16.9 சதவீதமாகவும் அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் கடல் மட்டம் ஆண்டுக்கு 0.66 மி.மீ என்ற அளவில் உயர்ந்து வருவதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்