சென்னை - காட்பாடி இடையே ‘வந்தே பாரத் மெட்ரோ’.. இன்று சோதனை ஓட்டம்..!

Mahendran

சனி, 3 ஆகஸ்ட் 2024 (09:07 IST)
தமிழகத்தில் ஏற்கனவே சில வந்தே பாரத் ரயில்கள் இயங்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது அடுத்த கட்டமாக சென்னை - காட்பாடி இடையே வந்தே பாரத் மெட்ரோ ரயில் இயக்க இருப்பதாகவும் இதற்கான சோதனை ரயில் ஓட்டம் இன்று நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.

12 பெட்டிகளை கொண்ட இந்த வந்தே பாரத் மெட்ரோ ரயில் முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டது என்றும் சொகுசு இருக்கைகள், கண்காணிப்பு கேமரா, நவீன கழிப்பறைகள் ஆகியவை இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

ஒரு பெட்டியில் 104 பேர் அமர்ந்தும் 200 பேர் நின்று கொண்டும் பயணம் செய்யலாம் என்றும் சோதனை ஓட்டத்தில் இந்த ரயில் 150 கிலோமீட்டர் வேகம் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சோதனை இயக்கம் வெற்றிகரமாக முடிந்த பின்னர் இந்த ரயில் இயங்கும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் சில வந்தே பாரத் ரயில்கள் இயங்கி வருகிறது என்பது தெரிந்தது. குறிப்பாக சென்னை - திருநெல்வேலி, சென்னை - விஜயவாடா, சென்னை - மைசூர் ஆகிய வந்தே பாரத் ரயில்கள் இயங்கும் நிலையில் தற்போது சென்னை - காட்பாடி இடையே வந்தே பாரத் மெட்ரோ ரயில் இயங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்