2 மாவட்டங்களில் இன்று முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை! ரசீதும் கிடைக்கும்..!

Siva

வியாழன், 14 நவம்பர் 2024 (07:56 IST)
தமிழகத்தில் உள்ள இரண்டு மாவட்டங்களில் இன்று முதல், டிஜிட்டல் முறையில் மது விற்பனை செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

மதுபான விற்பனை கூடங்களான டாஸ்மாக் கடைகளில், மது விற்பனை செய்யும் போது ரசீது கொடுக்க வேண்டும் என்றும், டிஜிட்டல் முறையில் மது விற்பனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

அந்த வகையில், சோதனை முறையாக டிஜிட்டல் முறையில் ஒரு சில இடங்களில் மது விற்பனை செய்யப்பட்டதாகவும், அதில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டதாகவும் கூறப்பட்ட நிலையில், இன்று முதல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள 220 டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுபானங்கள் வாங்குபவர்களுக்கு ரசீது வழங்கப்படும் என்றும், க்யூ.ஆர். கோடு மூலம் பணம் செலுத்தும் திட்டமும் நடைமுறைக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மது பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் முதல் 40 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக இருந்த புகார்களை தொடர்ந்து, டிஜிட்டல் முறையில் மது விற்பனை செய்யும் முறை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று முதல், இரண்டு மாவட்டங்களில் உள்ள 220 டாஸ்மாக் கடைகளில் டிஜிட்டல் முறையில் மது விற்பனை செய்யப்படும் நிலையில், விரைவில் தமிழக முழுவதும் இந்த நடைமுறை அமல் படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.


Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்