சென்னை டாக்ஸ் சேனல் முடக்கம்! யுடியூப் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 15 ஜனவரி 2021 (11:16 IST)
ஆபாசமாக பெண்களிடம் பேசி தங்கள் சேனலுக்கு பப்ளிசிட்டி தேடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

பெண்களிடம் ஆபாசமாக பேசியும் அவன் அதனை மோசமாக எடிட் செய்தும் யூடியூபில் பதிவு செய்த 3 பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை டாக்ஸ் என்ற அந்த சேனல் இவர்களாக ஸ்கிரிப்ட் செய்து ஒரு பெண்ணுக்கு பணம் கொடுத்து பேச வைத்து வெளியிட்ட வீடியோ பல ஆபாசமானக் கருத்துகளைக் கொண்டு இருந்ததால் வைரல் ஆனது. ஆனால் அந்த வீடியோவில் தோன்றிய பெண்ணே அவர்கள் மீது புகார் கொடுத்ததால், அவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையடுத்து அந்த சேனலை முடக்க வேண்டும் என்று சென்னை நகர துணை ஆணையர் யுடியூப் நிறுவனத்துக்கு கோரிக்கை வைத்தார். அதைவைத்து இப்போது சென்னை டாக்ஸ் என்ற சேனல் முடக்கப்பட்டுள்ளதாக யுடியுப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்