முழுவதுமாக இடிக்கப்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடம்....

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2017 (17:37 IST)
சென்னை தில்லை நகரில் தீ விபத்து ஏற்பட்ட சென்னை சில்க்ஸ் கட்டடம் இன்று முழுமையாக இடித்து முடிக்கப்பட்டது. 


 

 
இங்கு கடந்த மே 31ந் தேதி அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. அதில், அந்த கட்டடத்தில் இருந்த 7 தளங்களும் சேதமடைந்தன. அதில் எரிந்த தீயை அணைப்பதற்கே 2 நாட்கள் தேவைப்பட்டது. அதன் பின் அந்த கட்டடத்தை இடிக்க தமிழக அரசு ஆணையிட்டது. எனவே, ராட்சத ஜா கட்டர் இயந்திரத்தின் மூலம் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டன.
 
அப்போது ஏற்பட்ட விபத்தில் அந்த எந்திரத்தின் டிரைவர் சரத்குமார் என்பவர் பலியானார். அதனால் இடிப்பு பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன் பின் இடிப்பு பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டது. இன்று மாலை நிலவரப்படி அந்த கட்டடம் முழுவடுமாக இடித்து முடிக்கப்பட்டுள்ளது. மேலும், அருகிலிருந்த கட்டடங்களுக்கு எந்த பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதையடுத்து, இடிபாடுகளை அகற்றும் பணி நாளை முதல் தொடங்கவிருப்பதாக அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.


 
அடுத்த கட்டுரையில்