சென்னையில் இன்று பெட்ரோல் விலை உயர்வா?

Webdunia
வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (08:11 IST)
சென்னையில் கடந்த 110 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ற நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் பொதுமக்களுக்கு நிம்மதி ஏற்பட்டு உள்ளது.
 
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் காரணமாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் வாங்காத நிலையில் இந்தியா அதிக அளவில் வாங்கி குவித்தது
 
இதன் காரணமாக தற்போது இந்தியாவில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு இல்லை என்றும் விலையும் உயர வில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் இன்று சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிபிடத்தக்கது
 
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒரு லிட்டர் பெட்ரோல் 200 ரூபாய்க்கு மேல் அதிகமாக விற்பனையாகி வரும் நிலையில் இந்தியாவில் 100 நாட்களுக்கு மேல் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது பொது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்