அழகிரியின் அமைதிப்பேரணி: பாதுகாப்பு பணியில் 2000 போலீசார்

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2018 (08:24 IST)
முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகனும், இந்நாள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரருமான மு.க.அழகிரி இன்று சென்னையில் அமைதிப்பேரணி ஒன்றை நடத்துகிறார். இந்த பேரணிக்காக சுமார் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மு.க.அழகிரி தலைமையில் பேரணி நடக்கவுள்ளதையொட்டி பேரணி நடக்கும் பகுதிகளான வாலாஜா சாலை, கடற்கரை சாலை, கருணாநிதி நினைவிடம் ஆகிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை  திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில் இருந்து புறப்படும் இந்த அமைதி பேரணி கருணாநிதி நினைவிடத்தில் முடிவடைகிறது. இந்த பேரணியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என்று அழகிரி கூறியுள்ள நிலையில் 3 துணை ஆணையர்கள் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

இருப்பினும் அமைதிப்பேரணி குறித்த செய்திகளுக்கு ஊடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காததால் எந்தவித பரபரப்பும் இன்றி சென்னை வழக்கம்போல் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்