அழகிரிக்கு ஆதரவு தெரிவித்த திமுக செயலாளர் தற்காலிக நீக்கம்!

செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (19:20 IST)
சென்னைக்கு நேற்று வந்த மு.க.அழகிரியை வேளச்சேரி கிழக்கு பகுதி தி.மு.க. செயலாளர் மு.ரவி வரவேற்றதாக கூறப்படுகிறது. இதனால், அவர் மீது கட்சி நடவடிக்கை பாய்ந்துள்ளது. கட்சியில் இருந்து தற்காலிகமாக அவர் நீக்கிவைக்கப்பட்டுள்ளார்.


இது தொடர்பாக, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் பரிந்துரையின்படி, வேளச்சேரி கிழக்கு பகுதிச் செயலாளர் மு.ரவி கட்சி கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திமுகவின் இந்த நடவடிக்கையை அழகிரியின் மகன் துரை தயாநிதி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பதிவில்,

தலைவர் கலைஞருக்கு மவுன அஞ்சலி செலுத்துவது கட்சி விரோதச் செயலா? அப்படியென்றால் எத்தனை லட்சம் பேரை கட்சியிலிருந்து நீக்குவார்கள் என்பதையும் பார்ப்போமே என குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்