இன்று 22 மாவட்டங்களில் மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Webdunia
திங்கள், 20 மார்ச் 2023 (07:49 IST)
தமிழகத்தில் இன்று 22 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் இன்று மழை பெய்து வருகிறது என்றும் குறிப்பாக சென்னையில் நேற்று நள்ளிரவு திடீரென கன மழை பெய்தது என்பதும் குறிப்பிடப்பட்டது. 
 
இந்த நிலையில் இன்று 22 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மாவட்டங்கள் பின்வருவன்:
 
திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், தர்மபுரி, ஈரோடு, சேலம், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், கரூர், நாமக்கல், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர், மதுரை ஆகிய 22 மாவட்டங்களில் இன்னும் மூன்று மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்