பீச் விவகாரத்தில் கடுப்பான ஐகோர்ட்: அரசுக்கு வார்னிங்!!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (13:13 IST)
நவம்பர் மாதம் இறுதி வரை மக்கள் மெரினாவில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என சென்னை உயர் நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
 
கொரோனா காரணமாக சென்னையில் உள்ள கடற்கரைகளில் மக்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில் மெரினா கடற்கரையில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது என்பது குறித்து அரசு தனது முடிவை தெளிவாக அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் முன்னர் உத்தரவிட்டது. 
 
இதனை அடுத்து அக்டோபர் 31 வரை மெரினா கடற்கரையில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் நவம்பர் முதல் சென்னை மெரினா கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்படும் என நம்புகிறோம் என உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்து. 
 
ஆனால் தற்போது நவம்பர் மாதம் இறுதி வரை மக்கள் மெரினாவில் அனுமதிக்கப்படமாட்டார்கள் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த சென்னை உயர்நீதிமன்றதம் திரையரங்குகள் திறக்கும்போது கடற்கரையில் மக்களை அனுமதிப்பதில் என்ன சிரமம் என தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியதோடு மெரினாவில் மக்களை அனுமதிக்க நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என எச்சரித்தும் உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்