டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு 8.33 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக தமிழக அரசின் டாஸ்மாக் ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். அவர்கள் தமிழக முதல்வருக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது