தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட ஆறு மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தனி நீதிமன்ற நீதிபதியின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு ரத்து செய்து உத்தரவிட்டு உள்ளது.
டாஸ்மார்க் நிர்வாகம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் டெண்டர் கோரி விண்ணப்பிக்கும் அனைவரும் நில உரிமையாளர்களிடம் ஆட்சேபம் இல்லா சான்று பெற்று சமர்ப்பிப்பது சாத்தியமற்றது என்றும் அதை ஏற்றுக் கொண்டால் தற்போது உரிமை பெற்றவர்கள் மட்டுமே டெண்டர் கோரி விண்ணப்புக்கு முடியும் என்றும் எனவே இது குறித்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் 2022 ஆம் ஆண்டு டெண்டர் ரத்து செய்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து புதிய டெண்டர் கோர டாஸ்மார்க் நிர்வாகத்திற்கு அனுமதி அளித்துள்ளனர்