பாரத் என பெயர் மாற்றினால் ‘இந்தியா’ பெயரை பயன்படுத்த பாகிஸ்தான் திட்டம்?

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (08:04 IST)
இந்தியாவுக்கு பாரத் என்ற பெயரை மாற்றினால், இந்தியா என்ற பெயரை தனது நாட்டிற்கு மாற்ற பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான மசோதா  வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் இந்தியா தனது நாட்டின் பெயரை மாற்றிக்கொண்டால் இந்தியா என்ற பெயரை வைப்பதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது என்றும் அந்த பெயரை வைத்துக் கொள்வதற்கு உரிமை கோருவோம் என்றும் பாகிஸ்தானின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக அந்நாட்டின் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 பாரத் என்ற பெயரில் பெயரை இந்தியா வைத்தால் இந்தியா என்ற பெயரை பாகிஸ்தான் வைத்துக்கொண்டால் பெரும் சிக்கல் ஏற்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது. இதற்கு என்ன முடிவு காணப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்