நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் நிவாரண தொகை அளிக்கப்பட்டது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மருத்துவ படிப்புக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு நேற்று நடந்து முடிந்த நிலையில், முன்னதாக இந்த தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் மூன்று பேர் தேர்வு பயத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பிரச்சினையை தொடர்ந்து தமிழக அரசியல் கட்சிகள் பல நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் தேர்வு பயத்தால் உயிரிழந்த மாணவர்களுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியுள்ள நிலையில் மற்ற மாநில கட்சிகளும் நிவாரண நிதி வழங்கியுள்ளன. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் “நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தற்கொலையை ஊக்குவிக்கும்” என தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றத்தின் இந்த கருத்து சமூக வலைதளங்களில் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.