ராகுல் காந்திக்கு அளித்த பாதுகாப்பு குறித்து மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

Webdunia
வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (14:11 IST)
திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி சடங்கில் கலந்துக்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சரியாக பாதுகாப்பு வழங்காதது குறித்து விளக்கம் கேட்டு சென்னை உயர் நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 
திமுக தலைவர் கருணாநிதி கடந்த 7ஆம் தேதி காலமானார். இவரது இறுதி சடங்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துக்கொண்டார். அப்போது இவருக்கு சரியாக பாதுகாப்பு வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
 
இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து வழக்கறிஞர் சூரியபிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். சென்னை உயர்நீதிமன்றம் இதுகுறித்து மத்திய அரசு 4 வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்