தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு சீல்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Webdunia
வெள்ளி, 21 டிசம்பர் 2018 (15:06 IST)
சென்னை தி.நகரில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்குக் நேற்று வட்டாட்சியர் சீல் வைத்த நிலையில் இன்று அந்த சீலை அகற்றுங்கள் என சென்னை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தயாரிப்பாள சங்க அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றுங்கள் என்றும், தேர்ந்தெடுக்கப்பட்ட சங்க நிர்வாகிகளை போலீஸ் தடுத்து நிறுத்தியது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த உத்தரவால் விஷால் தரப்பினர் உற்சாகம் அடைந்துள்ளனர். நீதிமன்றம் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும், தனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் நேற்று விஷால் பேட்டியளித்த நிலையில் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்