சென்னையில் அரசு பேருந்து ஓட்டியபடி வீடியோ எடுத்த டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக வெளிவந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ரீல்ஸ் மோகம் அதிகரித்து வரும் நிலையில், வீடியோ எடுப்பதற்காக இளைஞர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ரிஸ்க் எடுத்து வருகின்றனர். அந்த வகையில், விளையாட்டாக எடுக்கப்படும் சில வீடியோக்கள் அவர்களின் வாழ்க்கையின் திசையை மாற்றி விடும் சம்பவங்களாக மாறுகின்றன.
அப்படித்தான், சென்னையில் அரசு பேருந்து ஓட்டியபடி, டிரைவர் மற்றும் கண்டக்டர் இணைந்து வீடியோ எடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவரும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை வடபழனி மாநகர பேருந்தை இயக்கிய டிரைவரும், அவரது அருகில் செல்போனுடன் இருந்த கண்டக்டரும் இந்த வீடியோவில் காணப்படுகின்றனர். இந்த வீடியோவை அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நிலையில், அதற்கு கடும் கண்டனம் எழுந்தது.
இதையடுத்து, போக்குவரத்து துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, பேருந்தின் டிரைவர் மற்றும் கண்டக்டர் ஆகிய இருவரையும் பணியிலிருந்து நீக்க உத்தரவிட்டுள்ளனர். இந்த நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.