சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. பயணிகள் மத்தியில் பரபரப்பு..!

Mahendran

செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (11:15 IST)
விமான நிலையம், கல்வி நிலையங்கள் உள்பட பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சற்றுமுன், சென்னை விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக தகவல் வெளியானதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
இன்று அதிகாலை, 237 பயணிகளுடன் சென்னை விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த சர்வதேச விமானம் ஒன்றில் வெடிகுண்டு இருப்பதாக மர்ம தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது.
 
இதையடுத்து, விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. சோதனையின் பின்னர், விமானத்தில் எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது. மேலும், பாதுகாப்பு காரணமாக அந்த விமானத்தில் பயணித்த அனைவரின் உடைமைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டன. எந்த பயணியிடமும் ஆபத்தான பொருட்கள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
இதனை அடுத்து, இன்றைய வெடிகுண்டு மிரட்டல் ஒரு தவறான தகவல் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 
சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் எழுந்துகொண்டிருக்கும் நிலையில், இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்