பேருந்து நிலையத்தில் திமுக பிரமுகர் வெட்டிக் கொலை! – சென்னையில் பரபரப்பு!

Webdunia
ஞாயிறு, 3 ஏப்ரல் 2022 (13:04 IST)
சென்னையில் பேருந்து நிலையம் அருகே திமுக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பிராட்வே பகுதியில் திமுக நிர்வாகியாக இருந்தவர் சவுந்தரராஜன். தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பிராட்வே பேருந்து நிலையம் அருகே பொதுமக்களுக்காக திமுக சார்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் பந்தலுக்கு பொருட்கள் கொண்டு சென்ற சவுந்தரராஜனை சுற்றி வளைத்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த சவுந்தரராஜன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்