சென்னையில் 107 கி.மீ. தூரத்திற்கு வடிகால்: மாநகராட்சியின் சூப்பர் திட்டம்

Webdunia
வெள்ளி, 10 ஜூன் 2022 (18:02 IST)
சென்னையில் 107 கி.மீ. தூரத்திற்கு வடிகால்: மாநகராட்சியின் சூப்பர் திட்டம்
சென்னையில் 107 கிலோ மீட்டர் தூரத்திற்கு வடிகால் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி தொடங்கியுள்ளது. 
 
சென்னையில் மழை பெய்தால் ஒரு சில நிமிடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருக்கும். 
 
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் 107 கிலோ மீட்டர் தூரத்திற்கு வடிகால் அமைக்கும் பணி குறித்து ஆய்வு சமீபத்தில் நடந்தது 
 
இதன்படி தற்போது சென்னை மாநகராட்சியில் 107 கிலோ மீட்டர் தூரத்துக்கு வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் 
 
பருவமழை காலங்களில் மழைநீர் தேங்குவதால் தவிர்க்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்