இன்று முதல் சென்னையின் முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்! முழு விவரங்கள்..!

Siva
புதன், 7 பிப்ரவரி 2024 (06:47 IST)
சென்னையின் முக்கிய சாலைகளில் ஒன்றான எம்சி சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

 சென்னை எம் சி சாலையில் உள்ள சிமெட்ரி சாலை சந்திப்பில் இருந்து ஜிஏ சாலை சந்திப்பு வரை சாலை முழுவதும் பாதசாரிகள் நடைபாதை அமைக்கும் பணி இன்று முதல் தொடங்குகிறது. இதையடுத்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது

ஸ்டான்லி சுரங்கப்பாதையில் இருந்து M.C.சாலையினை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும் திருவெற்றியூர் நெடுஞ்சாலை அல்லது மன்னார்சாமி கோவில் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

கும்மாளம்மன் கோவில் சாலை மற்றும் G.A. சாலையிலிருந்து M.C.சாலையினை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் மேற்கு கல்மண்டபம் சாலை மற்றும் மன்னார்சாமி கோவில் சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

மேற்கண்ட போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் தங்களது ஒத்துழைப்பினை வழங்குமாறு சென்னை மாநகராட்சியின் செய்திக்குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்