சென்னை மெட்ரோவில் பயணம் செய்ய வந்த கூலித்தொழிலாளர்கள் தடுக்கப்பட்டார்களா?

Mahendran

செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (16:52 IST)
சென்னை மெட்ரோ ரயிலில் கூலி தொழிலாளர்கள் பயணம் செய்ய வந்தபோது அவர்கள் தடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வரும் நிலையில் இது குறித்து மெட்ரோ நிர்வாகம் விளக்கம் அளித்தது.
 
இன்று காலை சென்னை மெட்ரோ ரயில் கூலி தொழிலாளர்கள் சிலர் தங்களுடைய வேலைக்கான பொருட்களுடன் மெட்ரோ ரயில் பயணம் செய்ய வந்த போது அவர்கள் மெட்ரோ ரயில் நிலைய அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. 
 
இந்த செய்தியை அடுத்து மெட்ரோ நிர்வாகத்திற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் இது குறித்து மெட்ரோ நிர்வாகம் தனது சமூக வலைதளத்தில் விளக்கம் அளித்துள்ளது. 
 
கட்டிட தொழிலாளர்கள் கூர்மையான பொருள்களுடன் வந்தார்கள் என்றும் மெட்ரோ ரயிலில் கூர்மையான பொருட்களுடன் பயணம் செய்ய அனுமதி இல்லை என்பதால் அவர்கள் தடுக்கப்பட்டதாகவும் அதன் பின்னர் கூர்மையான பொருள்களை துணி வைத்து மூடிய பின்னர் அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்