சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மின்னல் வேகத்தில் வெள்ளம் மற்றும் மீட்பு பணிகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
சென்னையில் பொதுமக்கள் இதுவரை 7780 புகார் அளித்துள்ளதாகவும் அவற்றுக்கு 3593 புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது
அதேபோல் சென்னையில் மழை நீர் தேங்கிய 400 இடங்களில் 240 இடங்கள் முழுமையாக சீராக அமைக்கப்பட்டதாகவும் கனமழை காரணமாக சென்னையில் 116 மரங்கள் விழுந்து நிலையில் வரங்கள் அனைத்தும் அகற்றப்பட்ட தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது
மேலும் 61 நிவாரண முகாம்களில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 1343 பேர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதியை செய்து கொடுப்பதாகவும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது