தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.1000 ரூபாய் நிவாரணம்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

Webdunia
வியாழன், 17 செப்டம்பர் 2020 (17:46 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 5 மாதங்களாக தமிழகம் உள்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள், பிளாட்பார வியாபாரிகள் முதல் தொழிலதிபர்கள் வரை நஷ்டம் அடைந்தனர். கடந்த ஐந்து மாதங்களாக வேலையின்றி வருமானம் இன்றி இருந்த பலர் அடிப்படை வாழ்க்கைக்கே செலவுக்கு பணமில்லாமல் தவிர்த்தனர் 
 
இந்த நிலையில் தமிழக அரசின் இந்த ஐந்து மாதங்களில் பல்வேறு துறையினர்களுக்கு நிவாரண உதவி செய்து வந்தது என்பதும் அவர்களுடைய வங்கி கணக்கில் பணம் செலுத்தி வந்தது என்பதும் தெரிந்ததே மேலும் ரேஷன் கடைகளில் இலவச பொருள்களும் வழங்கப்பட்டன 
 
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் காலத்தில் கஷ்டப்படும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூபாய் ஆயிரம் நிவாரணம் அளிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியின் பதிவு செய்யப்பட்ட தெருவோர வியாரிகளுக்கு ரூபாய் ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெருவோர வியாபாரிகள் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை மாநகராட்சி அலுவலகத்தில் வந்து வழங்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்