சென்னை மெட்ரோ ரயில் சேவை தற்காலிக நிறுத்தம்.. எந்த வழித்தடம்? என்ன காரணம்?

Siva
ஞாயிறு, 18 ஆகஸ்ட் 2024 (14:12 IST)
சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்லும் பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிக நிறுத்தம் என்ற தகவல் பயணிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னை சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் செல்லும் பச்சை வழித்தடத்தில் செல்லும் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு, விரைவில் சேவை தொடங்கும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் விம்கோ நகரில் இருந்து விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரயில் வழக்கம்போல் இயங்கும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் தங்கள் பயண திட்டத்தை மாற்றி வருவதாக கூறப்படுகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பெரிய அளவில் கூட்டம் இல்லை என்றும் எனவே மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் இன்னும் சில மணி நேரத்திற்குள் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படும் என்றும் அதன் பிறகு வழக்கம் போல் சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இயங்கும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்