இயல்புக்கு வந்தது சென்னை விமான நிலையம்.. பயணிகள் நிம்மதி..!

Siva
சனி, 20 ஜூலை 2024 (09:08 IST)
மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக சென்னை விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் சில விமானங்கள் தாமதமாக கிளம்பியதாகவும் இதனால் பயணிகள் கடும் சிக்கலில் இருந்த நிலையில் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு வந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.

சென்னை விமான நிலையம் உள்பட உலகம் முழுவதிலும் உள்ள விமான நிலையங்கள் மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக முடங்கிய நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் குறிப்பாக சென்னை விமான நிலையத்தில் முழுமையாக இயல்பு நிலை திரும்பி விட்டதாகவும் இதனால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

மைக்ரோசாப்ட் மென்பொருளில் ஒரு செக்யூரிட்டி அம்சத்தை அப்டேட் செய்ததால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும் அந்த அப்டேட்டை கேன்சல் செய்துவிட்டால் இந்த பிரச்சனை தற்போதைக்கு சரியாக விடும் என்று மைக்ரோசாப்ட் சொன்னதை அடுத்து பலர் அந்த அப்டேட்டை கேன்சல் செய்து வருகின்றனர்.

இதனை அடுத்து மைக்ரோசாப்ட் பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து வருவதாகவும் சென்னை விமான நிலையம் உள்பட உலகம் முழுவதும் விமான நிலையங்களில் இயல்பு நிலை திரும்பி வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் செக்யூரிட்டி அப்டேட்டை கேன்சல் செய்யாதவர்களுக்கு இன்னும் இந்த பிரச்சனை தொடர்ந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்