வங்கி சேவையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.. மைக்ரோசாப்ட் குளறுபடி குறித்து ரிசர்வ் வங்கி..!

Siva

வெள்ளி, 19 ஜூலை 2024 (20:43 IST)
மைக்ரோசாப்ட் குளறுபடியால், வங்கி சேவையில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

10 வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்களில் மட்டும் சிறிய அளவில் பாதிப்பு என கூறியுள்ள ரிசர்வ் வங்கி, பெரும்பாலான வங்கிகள் CrowdStrike-ஐ பயன்படுத்துவதில்லை என்றும், சிறிய வங்கிகள் மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என்றும் விளக்கம் அளித்துள்ளது.

இருப்பினும் மைக்ரோசாப்ட் குளறுபடி குறித்து மதிப்பாய்வு செய்து வருகிறோம் என்றும், செயல்பாட்டில் பின்னடைவு ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வங்கிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் ரிசர்வ் வங்கி தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஐடி நிறுவனங்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் வங்கிகளுக்கும் பெரிய பாதிப்பு இல்லை என்றும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் விமான நிறுவனங்களுக்கு மட்டுமே அதிக அளவு பாதிப்பு என்றும் தனியார் விமான நிறுவனங்கள் பெரும்பாலும் CrowdStrike-ஐ பயன்படுத்துவதால் தான் பெரிய அளவில் பாதிப்பை ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் மைக்ரோசாப்ட் கோளாறால் ஏற்பட்ட பிரச்னைகள் ஓரளவு சீராகி வருகின்றன என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அதேபோல் மைக்ரோசாப்ட் கோளாறு-"விமானம் தாமதமாவதால் பாதிக்கப்படும் பயணிகளுக்கு கூடுதல் இருக்கை, தண்ணீர் மற்றும் உணவு வசதி செய்து தருமாறு விமான நிலைய அதிகாரிகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு அவர்கள் தெரிவித்துள்ளார்.

Edited by Siva
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்