விண்டோஸ் மென்பொருள் குளறுபடி.. மைக்ரோசாப்ட் அதிகாரிகளை தொடர்பு கொண்ட மத்திய அரசு..!

Mahendran

வெள்ளி, 19 ஜூலை 2024 (15:57 IST)
மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் குளறுபடி தொடர்பாக மைக்ரோசாப்ட் அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்பில் உள்ளது என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ட்வீட் செய்துள்ளார்.
 
மேலும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் குளறுபடிக்கான காரணம் கண்டறியப்பட்டு, சிக்கலை தீர்க்க நடவடிக்கை வருவதாகவும்  மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய மின்னணு  மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள தேசிய தகவல் மையத்தின் நெட்வொர்க் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
 
முன்னதாக இன்று காலை முதல் உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட்  மென்பொருள் முடங்கியதாகவும் இதனால் ஏர்லைன்ஸ், வங்கிகள், ஐ.டி ஊழியர்கள் பணியாற்ற முடியாமல் தவித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 
 
உலகம் முழுவதும் 40 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருளை பயன்படுத்தி வரும் நிலையில் மில்லியன் கணக்கானோர் பணியாற்ற முடியாமல் தவித்தனர். சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக கணினியில் 'ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்' என காட்டுவதாக கூறப்படுகிறது.
 
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்