அதிமுக தலைமை அலுவலகத்தில் புகுந்த வெள்ளம்!

Webdunia
திங்கள், 4 டிசம்பர் 2023 (13:04 IST)
மிக்ஜாம் புயல் காரணமாக நள்ளிரவு முதல் தற்போது வரை சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வெள்ளக் காடாக மாறியுள்ளன. இன்று மாலை வரை மழை பெய்யும் என்பதால் இன்னும் வெள்ளம் அதிகரிக்கக் கூடும் என சொல்லப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

பல  இடங்களில் வெள்ளம் ஆறாக ஓடும் வீடியோக் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பீதியைக் கிளப்பி வருகின்றன. வெள்ளம் காரணமாக சாலைப் போக்குவரத்து, மின்சார ரயில் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவையும் பாதிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சென்னையில் 34 செமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்