ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை?? – முதல்வரிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கை!

Webdunia
திங்கள், 27 ஜூன் 2022 (11:32 IST)
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வது குறித்து ஆய்வு செய்த குழு இன்று அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்பித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட செயலிகளால் மக்கள் பலர் பணத்தை இழப்பதுடன், மேலும் கடன் வாங்கி விளையாடி கடன் கட்ட முடியாமல் சிக்குவது, மன உளைச்சலுக்கு உள்ளாகி தற்கொலை செய்வது உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட செயலிகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் கே.சந்துரு தலைமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு குழுவை அமைத்தார். கடந்த சில மாதங்களாக ஆய்வுகளை நடத்திய ஆய்வுக்குழு தற்போது இந்த ஆய்வி அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்துள்ளனர்.

இந்த அறிக்கையை கொண்டு ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மீது தடை சட்டம் கொண்டு வருவது குறித்து இன்று மாலை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்