அதிமுகவில் ஒற்றைத் தலைமையை கொண்டு வருவது குறித்து ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் நிகழ்ந்து வருகிறது. சில நாட்கள் முன்னதாக நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இதுகுறித்த பேச்சால் பரபரப்பு எழுந்த நிலையில் எந்த வித தீர்மானமும் நிறைவேறாமல் பொதுக்குழு கூட்டம் முடிவடைந்தது.
அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் டெல்லி சென்ற ஓபிஎஸ் அணி அங்கு தேர்தல் ஆணையத்திடம் இதுகுறித்து புகார் மனுக்களை அளித்துள்ளனர். பிறகு தற்போது சென்னை திரும்பியுள்ள ஓபிஎஸ் அதிமுகவில் நடந்து வரும் குழறுபடிகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் பயணித்து அதிமுக மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து தனக்கு ஆதரவு சேகரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.