இன்று 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

Prasanth Karthick
ஞாயிறு, 1 செப்டம்பர் 2024 (09:54 IST)

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

 

தென்கிழக்கு பருவமழை, வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த மாதம் முதலாக தமிழகத்தின் பல பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

 

இந்நிலையில் வளிமண்டல அடுக்கு சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்து வருகிறது. அந்த வகையில் இன்றும் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, இன்று கோயம்புத்தூர், நீலகிரி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, தென்காசி, விருதுநகர், கன்னியாக்குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான வரையிலான மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்