முல்லைப் பெரியாறு அணை வலுவாகவே உள்ளது! – மத்திய அரசு தகவல்!

Webdunia
திங்கள், 18 அக்டோபர் 2021 (09:53 IST)
முல்லை பெரியார் அணையை சர்வதேச நிபுணர்கள் கொண்டு ஆய்வு செய்ய கோரிய வழக்கில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.

முல்லை பெரியார் அணை வலுவற்று இருப்பதாகவும் அதனால் அதன் கொள்ளளவை குறைக்க வேண்டுமென்றும் நீண்ட நாட்களாக வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் அணையின் ஸ்திரத்தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ள மத்திய அரசு முல்லை பெரியார் அணை வலுவாக உள்ளதாகவும், அணை கதவுகள், மதகுகள் மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் இருந்த பழுதுகள் சரிசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் சிறுசிறு பணிகளும் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுமையாக நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்