ஆளுங்கட்சியை மிரட்டும் மத்திய அரசு - திருமாவளவன் குற்றச்சாட்டு

Webdunia
புதன், 18 ஜூலை 2018 (10:12 IST)
வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் மத்திய அரசு ஆளுங்கட்சியை மிரட்டுகிரது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
தொடர்ந்து தங்களது பேச்சைக் கேட்டு வந்த அதிமுக அரசு திடீரென மத்திய அரசின் சில திட்டங்களை கடுமையாக எதிர்த்தது. இதனால் அவர்களை தங்கள் பக்கம் கொண்டு வர மத்திய அரசு வழக்கம்போல் வருமான வரித் துறையை ஏவி விட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழக நெடுஞ்சாலை துறைக்கு ஒப்பந்த முறையில் சாலை முதற்கொண்டு பல கட்டுமான பணிகளை செய்து தருகிற எஸ்பிகே கட்டுமான நிறுவனத்திலும், அந்த நிறுவனத்தின் ஓனர் செய்யாதுரைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிறுவனத்திற்கும் எடப்பாடியாரின் சம்பந்திக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அவரை வைத்து ஆளுங்கட்சியை வழிக்கு கொண்டு வரலாம் என மத்திய அரசு நினைக்கிறது. 
 
ஆனால் தமிழகத்தில் தற்பொழுது நடைபெற்று வரும் வருமான வரித்துறை ரெய்டுக்கும் தங்களுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ஆளுங்கட்சியை பழையபடி தங்கள் பக்கம் இழுக்கவே மத்திய அரசு வருமான வரித் துறையை ஏவி விட்டுள்ளது என என மத்திய பிஜேபி அரசின் மீது பகிரங்க குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்