சென்னையில் குறைந்த குற்றங்கள் – சிசிடிவியால் ஏற்பட்ட நன்மை !

Webdunia
சனி, 17 ஆகஸ்ட் 2019 (14:03 IST)
சென்னை மாநகராட்சியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பின்னர் குற்றங்கள் பெருமளவில் குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை செய்தி  வெளியிட்டிருக்கிறது.

சென்னை, திருச்சி, மதுரை உள்ளிட்ட பெருநகரங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. சென்னையைப் பொருத்தவரை  50 மீட்டர்களுக்கு ஒரு சிசிடிவி கேமரா வீதம் நகரம் முழுமைக்கும் கேமரா கண்காணிப்பு பொருத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இந்நிலையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பின்னர் நகரில் நடந்துள்ள குற்றங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இதற்கான புள்ளிவிவரங்களையும் வெளியிட்டுள்ளது.

செயின்பறிப்பு :-
2018 ஆம் ஆண்டு 258
2019 ஆம் ஆண்டு 137
பொது இடங்களில் நடக்கும் தகராறுகள் :-
2018 ஆம் ஆண்டு – 24,447
2019 ஆம் ஆண்டு – 14,457
கொடுங்காய வழக்கு :-
2018 ஆம் ஆண்டு – 438
2019 ஆம் ஆண்டு – 360

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்