சசிகலா கணவர் நடராஜனுக்கு சிபிஐ பிடிவாரண்ட்

Webdunia
வியாழன், 7 டிசம்பர் 2017 (14:35 IST)
சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலா கனவர் நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் தற்போது சிபிஐ பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

 
சொகுசு கார் இறக்குமதி வழக்கில் சசிகலா கணவர நடராஜனுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சிபிஐ முதன்மை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த வழக்கை எதிர்த்து நடராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
 
கடந்த மாதம் 17ஆம் தேதி உயர்நீதிமன்றம் நடராஜனுக்கு அளித்த தண்டனையை உறுதி செய்தது. இதையடுத்து நடராஜன் உடல்நலம் காரணம் காட்டி உச்ச நீதிமன்றத்தின் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்க கோரி மனு தாக்கல் செய்தார். 
 
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் நடராஜனுக்கு சிறை செல்வதிலிருந்து தற்காலிமாக விலக்கு அளித்தது. இந்நிலையில் தற்போது உயர்நீதிமன்றம் தண்டனையை உறுதி செய்துள்ளதை அடுத்து சிபிஐ நடராஜனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்