1994ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து லெக்சஸ் காரை இறக்குமதி செய்த போது ரூ.1.62 கோடி மோசடி செய்த வழக்கில், சசிகலாவின் கணவர் நடராஜன், தமிழரசு பப்ளிகேஷன் நிர்வாகி வி.என்.பாஸ்கரன் மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த சில அதிகாரிகள் மீது சுங்கத்துறை வழக்குப் பதிவு செய்தது. அதன்பின் இந்த வழக்கு சி.பி.ஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த வழக்கு கடந்த 20 வருடங்களாக நடைபெற்று வந்தது. அதன் பின் கடந்த 2010ம் ஆண்டு சிபிஐ முதன்மை நீதிமன்ற தீர்ப்பு வழங்கியது. அதில், நடராஜன் உட்பட அனைவருக்கும் தலா 2 வருடம் சிறைத்தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த வழக்கை எதிர்த்து நடராஜன் உட்பட 4 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.