சென்னை தீவுத்திடல் மைதானத்தில் கார், பைக் சாகச நிகழ்ச்சி.. தேதி அறிவிப்பு..!

Siva
வெள்ளி, 7 மார்ச் 2025 (11:12 IST)
சென்னை தீவுத்திடல்  மைதானத்தில் கார் மற்றும் பைக் சாகச நிகழ்ச்சி நடைபெற இருப்பதாகவும் இந்த நிகழ்ச்சி ஏப்ரல் 12ஆம் தேதி நடந்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
ஏப்ரல் 12ஆம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை கார் பைக் சாகச நிகழ்ச்சி நடைபெறும் என்றும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் சுமார் 4000 டிக்கெட் வரையில் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் ரெட்புல் மோட்டார் ஸ்போர்ட்ஸ் அமைப்பின் நிர்வாகி தெரிவித்துள்ளார்.
 
இந்த சாகச நிகழ்ச்சியில்  அப்தோ ஃபெகாலி, லிதுவேனியா ஸ்டண்ட் பைக்கர் அராஸ் கிபீசா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொள்வார்கள் என்றும், இவர்களது சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
கடந்த ஆண்டு சென்னையில் இரவு நேர ஃபார்முலா 4 கார்பந்தயம் நடைபெற்ற நிலையில் இந்த ஆண்டு கார், பைக் ஸ்டண்ட் நிகழ்ச்சி நடத்தப்பட இருப்பதால் பார்வையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்