களைகட்டும் இடைத்தேர்தல் : நாளை முதல் அதிமுகவில் விருப்ப மனு...ரூ. 25 ஆயிரம் விண்ணப்பம்

Webdunia
சனி, 21 செப்டம்பர் 2019 (14:34 IST)
நாங்குநேரி - விக்கிரவாண்டி மற்றும் புதுவை மாநிலத்தில் உள்ள காமராஜ் நகர் ஆகிய தொகுதிகளுக்கான இடத்தேர்தல் வரும் அக்டோபர் 21ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான மனுதாக்கல் செப்டம்பர் 23 தொடங்கி 30ம் தேதி வரை நடைபெறும். மனு மீதான பரிசீலனைகள் அக்டோபர் 1 ம் தேதியும், மனுவை திரும்ப பெறுவதற்கு அக்டோபர் 3ம் தேதியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக - காங்கிரஸ் ஆகிய கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிகளும் முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பி.எஸ் . மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ் ஆகிய இருவரும்  முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
 
அதில், ராயப்பேட்டையிலுள்ள  அதிமுக தலைமை அலுவலகத்தில் நாளை காலை 10 முதல் அதிமுக சார்பில் விண்ணப்பம் விநியோகிக்கப்படும். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் ரூ. 25 ஆயிரம் கட்டணம் செலுத்தி, 23 ஆம் தேதிக்குள் விருப்பமனுக்களை பூர்த்தி செய்து அளிக்கலாம். விருப்ப மனுக்களை பூர்த்தி செய்து வரும் 23 ஆம் தேதி பிற்பகல் 3 மனிக்குள் தலைமை அலுவலகதில் வழங்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்