ஆர்.கே.நகர் தேர்தல் ; பே.டி.எம். மூலம் பணப்பட்டுவாடா? : அதிகாரிகளிடம் விசாரணை

Webdunia
சனி, 9 டிசம்பர் 2017 (12:18 IST)
ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ளவர்களுக்கு பே.டி.எம் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்படுகிறதா என தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 
கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, பல வகைகளில் பணப்பட்டுவாட நடைபெற்றதாக புகார் எழுந்தது. எனவே, தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்தது. இந்நிலையில், வருகிற 21ம் தேதி மீண்டும் அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, இந்த முறை பணப்பட்டுவாடாவை தடுக்க பல வகைகளிலும் தேர்தல் ஆணையம்  முயற்சி செய்து வருகிறது.
 
அந்நிலையில், ஆர்.கே.நகர் வாசிகளுக்கு பே.டி.எம். மூலம் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
 
இந்நிலையில், ஆர்.கே.நகர் தேர்தலில் பங்கேற்கும் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் நேற்று நடந்தது. அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் “பேடிஎம் மூலம் பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக எழுந்த புகார் தொடர்பாக அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினோம். அனுமதியில்லாமல் ஆயிரக்கணக்கில் ரூபாய் நோட்டுகளை பணப்பட்டுவாடா செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், ஒரே சமயத்தில் 2 ஆயிரத்திற்கு மேல் அதிக பேரின் கணக்குகளில் பணம் வரவு வைக்கப்படுகிறதா என்றும் கண்காணித்து வருகிறோம்’ என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்