நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, பிரெட், மளிகை பொருட்கள்!

Webdunia
புதன், 26 மே 2021 (09:45 IST)
நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, பிரெட், மளிகை பொருட்களை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தகவல். 

 
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தாலும் சிறு சிறு தளர்வுகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதலில் தோட்டக்கலைத்துறை மூலம் காய்கறி வியாபாரம் நடக்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்பிறகு ரேஷன் கடைகளை திறக்க அனுமதித்தது. 
 
இந்நிலையில், நடமாடும் காய்கறி வாகனங்களில் முட்டை, பிரெட், மளிகை பொருட்களை விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்